அனைத்து புனிதர்களின் தேவஸ்தானம்
இத் தேவஸ்தானம் கிரிஸ்தவ மதத்தின் மற்றுமொரு பிரிவான எங்லிகன்களின் வழிகாட்டலின் கீழ் நிர்மாணிக்கப்பட்டதால் எங்லிகன் தேவஸ்தானம் என அழைக்கப்படுகிறது.இம் மாபெரும் அலங்காரமான தேவ கூடமானது இலங்கையில் வாழ்ந்த பிரசித்தி பெற்ற கட்டிடக் கலை நிபுணரான திரு.ஜேம்ஸ் ஜீ ஸ்மிதர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திட்டத்திற்கேற்ப 1871 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி அதாவது 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.
இவ்விடமானது ராணியின் பூந்தோட்டமாக பராமரிக்கப்பட்டதுடன் அன்றிருந்த அரசினால் இங்கிலாந்து சபைக்கு வழங்கப்பட்டிருந்தது.