தலைமைக் காரியாலயம்
காலி மரபுரிமை மன்றமானது 1994 ஆம் ஆண்டின் பாராளுமன்ற 7ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்டு தற்போது வீடமைப்பு, நிர்மாணத்துறை, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கிவருகிறது. காலி கோட்டையை வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மையமாகவும் தொல்பொருளியல் செல்வாக்குமிக்க பிரதேசமாக பேணுவதற்கும், காலி கோட்டையையும் அதன் வரலாற்றுப் பின்புலத்தையும் பேணிப்பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் தேவையான வசதி வாய்ப்புக்களை மேற்கொள்வதென்பதே காலி மரபுரிமை மன்றத்தின் கடைப்பாடாகும்.
காலி மரபுரிமை மன்றத்தின் நிர்வாகம், முகாமைத்துவம், கட்டுப்பாடுகள் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் அதன் பணிப்பாளர் சபைக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.