காலி நான்கு கடவைகள் பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மூலம் காலிக் கோட்டையின் வியாபாரப் பெயர்களைப் பதிவு செய்தல் , நில வளாகத்தினை வாடகைக்கு விடுதல், நிர்மாணித்தல் மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் போன்றவைகள் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ள சட்ட திட்டங்கள், ஒழுங்கு முறைகள்
- காலிக் கோட்டைக்குள் மேற்கொள்ளப்படுகின்ற வியாபாரப் பெயர்ப் பதிவுகள் தொடர்பான திட்டங்கள் உப குழுவின் அனுமதிக்காக பிரதேச செயலாளர் மூலம் உட்படுத்தப்படும்.
- நில வளாகங்களை வாடகைக்கு விடுதல், அவ்விடம் அரச காணி ஒன்றாக அல்லது அரசினால் ஒதுக்கப்பட்ட காணியாக இருப்பின் ஒழுங்கு முறையாக பிரதேச செயலாளருக்கு தெரிவித்துக் கொள்ள வேண்டியதோடு, பெயர்கள் அல்லாத சுற்று நிரூபங்களுக்கு ஏற்ப பிரதேச செயலாளர் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- நிர்மாணித்தல் அல்லது அபிவிருத்தி அலுவலுக்காக உட்படுத்துவது அரச காணியாயின் , அக்காணி ஒழுங்கின் பிரகாரம் அரசினால் விடுவிக்கப்பட்ட காணியாவதோடு,அவ்வாறு விடுவிக்கப்படாத காணிகளில் நிர்மாணிக்கப்படுகின்ற கட்டடங்கள் அல்லது அபிவிருத்தி வேலைகள் அனுமதியற்ற நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்ளாகக் கொள்ளப்படுவதால் , 1979
ஆம் ஆண்டு 07 ஆவது இலக்கம் கொண்ட அரச காணி உரித்தாக்கலை மீள பெற்றுக் கொள்ளல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றது. - காலிக் கோட்டைக்குள் அபிவிருத்தித் திட்டங்களை முன் வைக்கும் போது கிட்டமிட்ட உப குழுவின் அனுமதியினைப் பெற்றுக் கொண்டதன் பின்னரே பிரதேச செயலாளருக்கு அத்திட்டத்தினை சமர்ப்பித்தல்.