கடல்சார் அருங்காட்சியகம் – Galle Heritage

கடல்சார் அருங்காட்சியகம்

கடல்சார் அருங்காட்சியகமானது தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் ஓர் நிறுவனமாகும். இது 09-05-1992 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டதாகும். ஒரு கலத்தைக்கொண்ட உயிரினம் முதல் உலகில் வாழும் மிகப்பெரிய உயிரினமான நீலத் திமிங்கிலம் போன்ற பல உயிரினங்களினது வாழ்க்கைத்தன்மைகள் இங்குள்ள பார்வைக்கூடங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்காக கடல் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் காணக்கூடிய விசேட சுற்றுப்புற அம்சங்களாகிய கண்டல் தாவரங்கள்¸ உப்பான சதுப்புநிலங்கள்¸ மண்திட்டுக்கள்¸ கடற்தாவரங்கள்¸ பவழப்பாறைகள்¸ கடற்கரை மண் போன்றவற்றினைக் கொண்டு உருவமைக்கப்பட்ட தோற்றச்சூழுலில் ஜீவராசிகளின் செயற்பாடுகளும் அவற்றின் தொடர்புறுகளும் பூகோளத்தின் உயிரியல் பன்முகத்தன்மைகளும் இங்கு அழகுற எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

கடல்சார் அருங்காட்சியகமானது 26-12-2004 ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையினால் முற்றாக அழிவுற்ற நிலையில் பின்னர் மீண்டும் மக்கள் பார்வைக்காக 18-05-2009 ஆம் திகதி மீள் உருவமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. ஞாயிறு¸ திங்கள்¸ அரச விடுமுறை தினங்கள் தவிர்த்து ஏனைய அனைத்து நாட்களிலும் காலை 09.00 மணிமுதல் 05.00 மணிவரை மக்களுக்காக திறந்துள்ளதுடன் பார்வையிடுவதற்காக மக்களிடம் இருந்து அறவிடப்படும் அனுமதிக்கட்டணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன: –

  வயதானவர்கள் சிறுவர்கள் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்
உள்நாட்டவர்கள் Rs. 20/- Rs. 10/- Rs. 5/- Rs. 15/-
வெளிநாட்டவர்கள் Rs. 300/- Rs. 150/-

You are donating to : Greennature Foundation

How much would you like to donate?
$10 $20 $30
Would you like to make regular donations? I would like to make donation(s)
How many times would you like this to recur? (including this payment) *
Name *
Last Name *
Email *
Phone
Address
Additional Note
paypalstripe
Loading...