தென் மாகாணத்துக்குரித்தாகிய சமூக மற்றும் கலாசார மரபுரிமையை பேணுவதற்கும்¸ கற்கைகள்¸ காட்சிப்படுத்துதல்¸ மற்றும் அறிவுப்பரப்பை வழங்கும் நோக்கிலும் தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் நிர்வாக அதிகாரியின் கீழ் செயல்படும் விதத்திலும் பிரதேச நூதனசாலையாகவும் காலி தேசிய நூதனசாலையானது 1986 மார்ச் மாதம் 28 ஆந் திகதி பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
காலி தேசிய நூதனசாலையானது தன்னகத்தே மூன்று பார்வைக்கூடங்களை ;கொண்டுள்ளது. அதில் முதலாவது கூடத்தில் வரலாற்றுச்சிறப்புமிக்க காலி கோட்டை மற்றும் தென் மாகாணத்துக்கே சிறப்புடைய சமூக¸ கலாசார மரபுரிமைகளை எடுத்துக்காட்டும் நூதனபொருட்களும்¸ இரண்டாவது கூடத்தில் காலனித்துவ காலத்திற்குரிய சமுதாய பின்னணிகளை வெளிக்காட்டும் அரும்பொருட்களும்¸ மூன்றாம் கூடத்தில் சீன – இலங்கை வரலாற்று நட்புரிமைகளை வெளிக்காட்டும் பெறுமதிமிக்க பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சம்பிரதாய கைத்தொழிற்களை எடுத்துக்காட்டும் முகமூடிகள்¸ ஆமை ஓடுகளைக் கொண்டு ஆக்கப்பட்ட பொருட்களின் தொகுப்;புக்கள்¸ கருங்காலி மரக்குன்றுகளில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்¸ பின்னல் சரிகைகள்¸ யானைக் கொம்புகளில் செய்யப்பட்ட பொருட்கள்¸ வெற்றிலைக் கிண்ணங்கள்¸ உலோகப் பாண்டங்கள் போன்ற காட்சிப்பொருட்களும் மேலும் ஒல்லாந்தர்களின் வீட்டுப் பொருட்கள்¸ பல்வேறுபட்ட ஆயுதங்கள்¸ களஞ்சியப்பாத்திரங்கள்¸ சீன அலங்காரங்களுடன் கூடிய சிங்கஉருவமும் சீன கடற்படைத் தலைமைத் தளபதி ஷேங்கினுடையதும்¸ ஃபாஹியங் பிக்குவினுடையதும் தங்கமுலாமிடப்பட்ட உருவங்கள் என்பன உள்நாட்டு வெளிநாட்டு பார்வையாளர்களை கவர்ந்திளுக்கும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் அரும்பொருட்களாகும்.
உள்நாட்டு வெளிநாட்டு பார்வையாளர்களை காலி தேசிய நூதனசாலையானது அதிகம் ஈர்ப்பதற்கு காரணமாக இங்குள்ள அரும்பொருட்களின் தொகுப்புக்கள் மாத்திரமன்றி இப்பொருட்களை பராமரிப்பதற்கு அமைவிடமாகவுள்ள கட்டிடமும் ஒரு காரணியாகும். கி.பி. 1686 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்த கட்டிடக்கலை அமைவுகளுக்கேற்ப கட்டப்பட்ட இக்கட்டிடத்தின் பழம்பெருந்தன்மையானது உள்நாட்டு வெளிநாட்டு பார்வையாளர்களின் அவதானத்தை பெருமளவில் ஈர்த்துவருகின்றது.
நூதனசாலைக் கட்டிடத்தின் விசேட அம்சங்கள்
உள்நாட்டு வெளிநாட்டு பார்வையாளர்களை காலி தேசிய நூதனசாலையானது அதிகம் ஈர்ப்பதற்கு காரணமாக இங்குள்ள அரும்பொருட்களின் தொகுப்புக்கள் மாத்திரமன்றி இப்பொருட்களை பராமரிப்பதற்கு அமைவிடமாகவுள்ள கட்டிடமும் ஒரு காரணியாகும். கி.பி. 1686 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்த கட்டிடக்கலை அமைவுகளுக்கேற்ப கட்டப்பட்ட இக்கட்டிடத்தின் பழம்பெருந்தன்மையானது உள்நாட்டு வெளிநாட்டு பார்வையாளர்களின் அவதானத்தை பெருமளவில் ஈர்த்துவருகின்றது.
திறந்திருக்கும் நாட்கள் | செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை |
மூடியிருக்கும் நாட்கள | ஞாயிற்றுக்கிழமைகள்¸ திங்கட்கிழமைகள்¸ போயாதினம் உட்பட்ட அரச விடுமுறை தினங்கள் |
திறந்திருக்கும் நேரம் | காலை 09.00 மணி முதல் பிற்பகல் 05.00 மணிவரை (அனுமதிச் சீட்டுக்கள் பிற்பகல் 04.30 மணி வரை மட்டுமே வழங்கப்படும்) |
உள்நாட்டு வயதானவர்கள் | Rs. 20/- |
உள்நாட்டு சிறார்கள் | Rs. 10/- |
உள்நாட்டு மாணவர் குழுக்கள் | Rs.5/- (for each child) |
ஆசிரியர்கள் | Rs.15/- |
வெளிநாட்டு வயதானவர்கள் | Rs.300/- |
வெளிநாட்டு சிறார்கள் | Rs.150/- |
சாதாரண புகைப்பட அனுமதி | Rs. 250/- |
காணொளி (வீடியோ) அனுமதி | Rs. 2000/- |
“காலி மரபுரிமை” நடமாடல் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான அனுமதிகளை நூதனசாலைகளில் நடைமுறையிலிருக்கும் சட்டநடவடிக்கைகளுக்கேற்ப வழங்குவதற்கான வசதிகள்.
நூதனசாலைக்கு வரும் பாடசாலை மாணவ சிறார்களுக்கு சிறு குழாமாக நூதனசாலை வளாகத்தினுள் இருக்கும் இடவசதிகளுக்கேற்ப விளக்கவுரைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வசதிகள்.
காலி நூதனசாலையால் வெளியிடப்பட்ட கைப்பிரசுரங்கள் உட்பட தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தினால் வெளியிடப்படும் பிரசுரங்களையும் நூதனசாலையின் புத்தகக்கடை மூலம் கொள்முதல் செய்துகொள்ளும் வசதிவாய்ப்புக்கள்
நிலைய பொறுப்பதிகாரி,
காலி தேசிய நூதனசாலை,
பள்ளி வீதி,
கோட்டை,
காலி.
தொலைபேசி : 091 2232051
தொலைநகல் : 091 2232051
E-மின்னஞ்சல் : gallenationalmuseum@gmail.com