தொல்பொருள் திணைக்களம் மூலம் விதிக்கப்பட்டு உள்ள காலிக் கோட்டை க்குள் மேற் கொள்ளக் கூடிய பொது விதந்துரைகள் மற்றும் ஒழுங்குகள்
I. நிபந்தனைகள் – அசையாத புகைப்படங்கள் மற்றும் காணொளிப் பதிவு செய்து கொள்வதற்கான அனுமதி
காலிக் கோட்டைச் சுவர் தொல்பொருலியல் சின்னமாக அமைந்துள்ளதோடு, அதனால் சூழப்பட்டு உள்ள பிரதேசத்திற்கு உட்பட்ட வலயமானது மனிதர்கள் வசிக்கின்ற ஒரு இடம் ஆகும். அதனால் புகைப்படங்கள், வீடியோ பதிவு செய்தல் மற்றும் ஏனைய செயற்பாடுகள் காலிக் கோட்டை வாசிகளுக்கு ,சுற்றுலாப் பயணிகளுக்கு அல்லது வேறு தரப்பினர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மேற் கொள்வதற்கு திட்டமிட்டுக்
கொள்ள வேண்டும்.அவ்வாறு திட்டமிடப்பட்டுக் கொண்ட செயற்பாடுகளுக்கு மாத்திரம் கீழ்க் காணப்படும் நிபந்தனைகளுக்கு இணங்க அனுமதி வழங்கப்படும்.
- காலிக் கோட்டை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்யும் போது தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவரின் முன்னிலையில் மாத்திரம் செய்ய வேண்டியதோடு,பொது மக்களின் நலன் கருதி அவரால் குறிப்பிடப்படுகின்ற நிபந்தனைகளுக்கு இணங்கவே ஆகும்.
- எந்த விதமான தேவையும் இன்றி இருக்கின்ற எந்த ஒரு நபரையும் தங்களது புகைப்படங்களை எடுக்கக் கூடாது.
- நீங்கள் பதிவு செய்து கொள்வதனைக் காரணமாக வைத்து புராதன சின்னங்களுக்கு, இடங்களுக்கு ,பூமிக்கு, அல்லது சூற்றுப்புறச் சூழலுக்கு எந்த விதமான தாக்கங்களும் செய்யக் கூடாததோடு,அவ்வாறு நிகழாமல் இருப்பதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும்.
- தொல்பொருட்கள் நூதனசாலைக்கு உள்ளே புகைப்படங்கள்/ வீடியோ பதிவு செய்யக் கூடாது.
- திணைக்களத்தின் மூலம் பாதுகாப்பு மற்றும் அகழ்வுகள் மெற் கொள்ளப்படுகின்ற இடங்களை படம் எடுக்கக் கூடாது.
- 1940 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்கம் கொண்ட புராதனச் சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் 47 ஆம் இலக்க 47 ஆம் பிரிவின் கீழ் 1940 -12 -23 ஆம் திகதிய 8698 ஆம் இலக்கம் கொண்ட வர்த்தமானிப் பத்திரிகை மூலம் வெளியிடப்பட்ட கட்டளை இலக்கம் 47 இன் கிழ் இந்நிபந்தனையை மீறுதல் அல்லது இச்சட்டத்தின் 44 பிரிவின் கீழ் தண்டனைனக்கு உரிய குற்றம் ஆகும். இந்நிபந்தனை மற்றும் கட்டளைகளை மீறுதல் அல்லது ஏதாவது ஒரு முறையில் தொல்பொருட் சொத்துக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தினால் 1998 ஆம் 24 ஆம் இலக்க தொல்பொருட் சொத்துக்கள் திருத்தச் சட்டத்தின் 15 ஆம் இலக்கம் கொண்ட (ஆ) பிரிவின் கீழ் தண்டனைனக்கு உரிய குற்றம் ஆகும்.
- இதன் கீழ் பெற்றுக் கொள்ளப்படுகின்ற உருவப் படங்களை எந்தவொரு வியாபார நடவடிக்கைக்காகவும் , பதிப்புச் செய்து வெளியீடு செய்தல், ஒலி பரப்புதல், பிரச்சாரம் செய்தல் அல்லது கண்காட்சிக்கு உட்படுத்திக் கொள்வதாயின் அதற்கு முன்னர் தயாரிப்புச் செய்யப்பட்ட இறுதிப் பிரதியினை இத் திணைக்களத்திற்கு சமர்ப்பித்து அதற்கான அனுமதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- தங்களால் கோரப்படுகின்ற விடயத்திற்கு எஏற்ப கிடைக்கப் பெறுகின்ற அதிகாரத்தின் கீழ் பெற்றுக் கொள்ளப்படுகின்ற படங்களை வேறு செயற்பாடுகளுக்காக பிரயோகிக்கப்படக் கூடாததோடு, அவ்வாறு உட்படுத்திக் கொள்வதாயின்,அதற்காக எழுத்து மூலமான அனுமதியினை தாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- தொல்பொருட் சின்னங்களை உள்ளாக்கி வீடியோப் பதிவுகளை மேற்கொள்ளும் போது இச்சின்னங்களின் பொறுப்பாளர்களின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- காலிக் கோட்டைக்குள் ஆகாயத்தில் இருந்து கொண்டு பதிவுகளை மேற்கொள்ளும் போது இச்சின்னங்களின் பொறுப்பாளர்களின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- ட்ரோன்ன புகைப்படக் கருவிகளைப் பயன்படுத்துவதற்காலை இலங்கை விமானப் படை அதிகார சபையின் ,பாதுகாப்பு பதவி நிலை உத்தியோகத்தர் அலுவலகத்தின் மற்றும் ஏனைய அதற்கு உட்பட்ட தரப்பினர்களின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.இவ் ட்ரோன்ன புகைப்படக் கருவியினை செயற்படுத்தும் போது தொல்பொருட் சொத்துக்கள் அல்லது நினைவுச் சின்னங்களுக்கு நேரடியாக மேலால் பறக்க விடக்கூடாததுடன், குறைந்த பட்சம் ச்சின்னங்களின் திரைக்கு 100 அடிகள் தூரத்தில் இருந்தே செயற்படுத்தப்பட வேண்டும்.
- அவ் அனுமதியினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரத்துச் செய்வதற்கு தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கு முடிந்த்தோடு,அதற்கான எந்தவொரு நட்டஈட்டுத் தொகையினையும் வழங்குவதற்கு தொல்லியல் திணைக்களம் பொறுப்பு இல்லை.
- அவ் அனுமதிக்கான கால வரையரைக்கு மாத்திரமே உட்பட்டது ஆகும்.
- திரைப்படங்கள , நாடகங்கள், அல்லது அவ்விதமான வேறு எந்தவொரு படப்பிடிப்புக்களின் போது எந்த வொரு நிர்மாணத்திற்கும்,நிலத்தினை அகழ்வதற்கும் அல்லது தீ வைத்தல் போன்றவற்றை மேற் கொள்ளக் கூடாது. அத்தோடு தற்காலிக கவசங்கள் பொறுத்தப்பட்டு உள்ள சந்தர்ப்பங்களில்,அவற்றை அகழ்வுகள் இடம் பெறாத வகையில் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தற்காலிக கவசங்கள் எந்தவொரு சின்னத்திற்கும் அல்லது அதன் பகுதிக்கு தொடர்பு இல்லாது பொறுத்தப்பட வேண்டும்.
- திரைப்படங்கள , நாடகங்கள்,விளம்பரக் காட்சிகளை படம் எடுப்பதற்காக கைப்பிரதிகள் , கதையின் சாராம்சம் மற்றும் அச்சின்னங்களுடன் தொடர்பான இடங்கள் படம் எடுக்கப்படுகின்ற விதம் தொடர்பான பூரண அறிக்கை ஒன்றினை தொல்லியல் திணைக்களத்திற்கு தமது கோரிக்கையுடன் சமர்ப்பிகப்பட வேண்டும்.
- நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதியில் இடத்தினை உரிய முறைப்படி சுத்தப்படுத்தி, தொல்லியல் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.
- இப்புகைப் படங்கள் ,வீடியோப் படம் எடுத்தல் மற்றும் படப்பிடிப்புச் செய்தல் காரணமாக காலிக் கோட்டை தங்குவோர்களுக்கு,சுற்றுலாப் பயணிகளுக்கு, அல்லது வேறு தரப்பினர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும்.
II. நிபந்தனைகள் – பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்களுக்கான
- காலிக் கோட்டை தொல்பொருள் சார்ந்த இடங்களில் மேற் கொள்ளப்படுகின்ற அனைத்து விதமான செயற்பாடுகளும் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவரின் முன்னிலையில் மாத்திரம் மேற் கொள்ளப்பட வேண்டியதுடன் ,பொது மக்கள் நலன் கருதி அவரால் விதிக்கப்படுகின்ற நிபந்தனைகளுக்கு உடன்பட்டதாக இருக்க வேண்டும் .
- எந்த விதமான தேவையும் இன்றிய செயற்பாடுகள் ,முறைகேடான நடத்தைகள் மற்றும் இலங்கை கலாச்சாரத்திற்குப் பொருந்தாத நிகழ்ச்சித் திட்டங்கள் அல்லது ஏனையவைகளை முன் வைத்தல் போன்றவைகளை மேற்கொள்ளக் கூடாது.
- 1940 ஆம் ஆண்டு 9 அம் இலக்க தொல்பொருட் சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் 47 ஆம் இலக்க (ஏ) பிரிவின் கீழ் இந்நிபந்தனை வெளியிடப்படதோடு, இந்நிபந்தனைகள் மற்றும் கட்டளைகளை மீறுவது இக்கட்டளைச் சட்டத்தின் 44 ஆவது பிரிவின் கீழ் தண்டனைனக்கு உரிய குற்றம் ஆகும். இந்நிபந்தனைகள் மற்றும் கட்டளைகளை மீறுவது அல்லது ஏதாவது ஒரு முறையில் தொல்பொருட் சொத்துக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தினால் 199மெ ஆண்டு 24 ஆம் இலக்க தொல் பொருட்சொத்துக்கள் கட்டளை திருத்தச் சட்டத்தின் 15 (ஆ) பிரிவின் கீழ் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்.
- ட்ரோன புகைப்படக் கருவியைப் பயன்படுத்துவதற்காக இலங்கை ட்ரோன்ன புகைப்படக் கருவிகளைப் பயன்படுத்துவதற்காலை இலங்கை விமானப் படை அதிகார சபையின் ,பாதுகாப்பு பதவி நிலை உத்தியோகத்தர் அலுவலகத்தின் மற்றும் ஏனைய அதற்கு உட்பட்ட தரப்பினர்களின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.இவ் ட்ரோன்ன புகைப்படக் கருவியினை செயற்படுத்தும் போது தொல்பொருட் சொத்துக்கள் அல்லது நினைவுச் சின்னங்களுக்கு நேரடியாக மேலால் பறக்க விடக்கூடாததுடன், குறைந்த பட்சம் அச்சின்னங்களின் திரைக்கு 100 அடிகள் தூரத்தில் இருந்தே செயற்படுத்தப்பட வேண்டும்.
- எந்தவொரு நிகழ்ச்சித் திட்டத்திற்காகவும் கோட்டையி அணையினைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
- தங்களது நிகழ்ச்சித் திட்டங்களுக்காக எந்த விதமான கட்டடகளை நிர்மாணித்தல் , நிலத்தினை அகழ்தல் அல்லது தீ வைத்தல் போன்றவற்றை மேற் கொள்ளக் கூடாததோடு, அத்தோடு தற்காலிக கவசங்கள் பொறுத்தப்பட்டு உள்ள சந்தர்ப்பங்களில் ,அவற்றை அகழ்வுகள் இடம் பெறாத வகையில் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தற்காலிக கவசங்கள் எந்தவொரு சின்னத்திற்கும் அல்லது அதன் பகுதிக்கு தொடர்பு இல்லாது பொறுத்தப்பட வேண்டும்.
- தங்களது செயற்பாடுகள் காரமாக புராதன இடங்களுக்கு எந்த வித பாதிப்புக்கள் அகௌரவங்கள் ஏற்படாத படாது இருக்க வேண்டியதுடன் பூமிக்கோ அல்லது சுற்றுச் சூழலுக்கோ எந்த விதமான பாதிப்பும ஏற்படாத முறையில் பொறுப்பாக இருக்க வேண்டும்.
- அவ் அனுமதியினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரத்துச் செய்வதற்கு தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கு முடிந்த்தோடு,அதற்கான எந்தவொரு நட்டஈட்டுத் தொகையினையும் வழங்குவதற்கு தொல்லியல் திணைக்களம் பொறுப்பு இல்லை.
- உரிய வேறு நிறுவனங்களின் அனுமதியினைப் தாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதியில் பூமிக்கு உட்புறத்தில் உள்ள அனைத்து குப்பைகளையும் உரிய முறைப்படி அப்புறப்படுத்தி இடத்தினை சுத்தீகரித்து தொல்பொருள் உத்தியோகத்தர்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.
- வார இறுதியில் மற்றும் கடமை நேரங்களில் அப்பால் மேற் கொள்ளப்படுகின்ற நிகழ்ச்சித் திட்டங்களை மேற் பார்வை செய்கின்ற தொல்பொருள் உத்தியோகத்தர்களுக்காக மேலதிக நேரக் சம்பளம் அல்லது வேறு அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவுகள் உரிய தரப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
III. நிபந்தனைகள் – காலிக் கோட்டைக்கு உள்ளே சுவரொட்டிகள்,பதாகைகள் மற்றும் றிவிப்புக்களைக் காட்சிப்படுத்தல்
- காலிக் கோட்டைக்கு உள்ளே சுவரொட்டிகள்,பதாகைகள் மற்றும் அறிவிப்புக்களைக் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது.
- வியாபார நிலையங்களின் பெயர் பதாகைகள் 10 X 2 அடிகள் அளவிற்கு மேற்படாது இருக்க வேண்டிதுடன் கருப்பு வெள்ளை நிறத்தினில் மாத்திரமே நிர்மாணிக்கப்பட வேண்டும்.
- அப்பெயர்ப் பதாகைகள் பொருத்தப்படும் போது நினைவுச் சின்னங்களுக்கு அல்லது அதன் பகுதிகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படாத வகையிலும் நினைவுச் ன்னங்களின் கட்டடக் கலை விடயங்கள் மறையாமல் இருக்குமாறு பொருத்தப்பட வேண்டும்.
- எந்த விதத்திலும் வியாபார உற்பத்தி , அனுசரணை பதாகைகளை இடுதல் கூடாது.
- வியாபார நிலையங்களின் முன்னால் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவதாயின் ,அவற்றை 2 ½ X 1 ½ அடிகளுக்கு மேற்படாமல் இருக்க வேண்டியதோடு, அவற்றின் உதவியுடன் பொருத்துதானது தற்காலிகமான ஒன்றாக இருக்க வேண்டும்.
- காலிக் கோட்டைச் சுவரின் மீது எந்தவிதமான சுவரொட்டிகள்,பதாகைகள் மற்றும் அறிவிப்புக்களையும் பொருத்தக் கூடாது.