அல்மீரான் முஸ்லீம் பள்ளி
போர்த்துகேயரின் ஆட்சிக் காலத்தில் காலிக் கோட்டையினுள் முஸ்லீம்களுக்கு நடைமுறைச் சுதந்திரம் இல்லாமல் இருந்ததோடு அவ்விடம் ஒல்லாந்தர் வசம் ஆன பிறகு அவர்களுக்கு கோட்டையினுள் குடியேறும் அனுமதி கிடைக்கப் பெற்றது. அதன் மூலம் அவர்களுக்கு ஒழுங்காக வியாபாரம் செய்வதற்கும் வாழ்வதற்கும் ஏற்ற இட வசதி கிடைக்கப்பெற்றது. தற்போது காணப்படும் முஸ்லீம் பள்ளி கட்டப்பட்டுள்ளஇடத்தில் ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தின்போது முஸ்லீம் பள்ளியொன்றுஇருந்ததாக கி.பி. 1770 இல் உருவாக்கப்பட்ட ஒரு வரைபடம் சான்று பகருகிறது. இப்பள்ளியானது 1890 ஆம் தசாப்த காலத்தின் போது ஓட்டினால் வேயப்பட்ட கூரையைக் கொண்ட சிங்கள தனிமாடி வீடாகவே காணப்பட்டது. தற்போது இருக்கும் வெள்ளை நிறமான மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்ட முஸ்லீம் பள்ளி கி.பி. 1902 இல் கட்டியெழுப்பப்பட்டதொன்றாகும்.